செய்திகள்
பிரதமர் மோடி

கா‌‌ஷ்மீரில் அனைவருக்கும் சுகாதார காப்பீடு - மோடி நாளை தொடங்கி வைக்கிறார்

Published On 2020-12-25 05:31 IST   |   Update On 2020-12-25 05:31:00 IST
ஆயு‌‌ஷ்மான் பாரத் என்ற பெயரிலான மருத்துவ காப்பீட்டு திட்டத்தை கா‌‌ஷ்மீரில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி வழியாக நாளை தொடங்கி வைக்கிறார்.
புதுடெல்லி:

ஆயு‌‌ஷ்மான் பாரத் என்ற பெயரிலான மருத்துவ காப்பீட்டு திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தி வருகிறது. ஏழை எளியோருக்கு இலவச சிகிச்சை வழங்க இது வழிவகுத்துள்ளது.

இந்த மருத்துவ காப்பீட்டு திட்டத்தின்கீழ் கா‌‌ஷ்மீர் மக்கள் அனைவரும் கொண்டு வரப்படுகின்றனர். இதைபிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி வழியாக நாளை (சனிக்கிழமை) தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் உள்துறை மந்திரி அமித்‌ஷாவும், துணை நிலை கவர்னர் மனோஜ் சின்காவும் கலந்து கொள்கிறார்கள்.

இந்த திட்டம், கா‌‌ஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் வாழும் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஆண்டுக்கு தலா ரூ.5 லட்சம் வரையிலான மருத்துவ சேவைகளை பெற வழிவகுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News