பட்டியலினத்தவர், பழங்குடியினர் கல்வி கற்கக் கூடாது என்பதே பாஜகவின் இலக்காக உள்ளது என ராகுல்காந்தி விமர்சனம் செய்துள்ளார்.
பட்டியலினத்தவர், பழங்குடியினர் கல்வி கற்கக் கூடாது என்பதே பாஜகவின் இலக்கு- ராகுல் விமர்சனம்
பதிவு: நவம்பர் 29, 2020 17:23
ராகுல் காந்தி
புதுடெல்லி:
60 லட்சம் எஸ்சி, எஸ்டி மாணவர் கல்வி உதவித்தொகையை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளதாக செய்திகள் வெளியானது. இந்த செய்தியை காங்., எம்.பி., ராகுல்காந்தி தனது டுவிட்டர் பதிவில் கூறியதாவது:-
11 மற்றும் 12 வகுப்புகளில் 60 லட்சத்திற்கும் மேற்பட்ட பட்டியலினத்தவர், பழங்குடியினர் மாணவர்களுக்கு பள்ளிப்படிப்பை முடிக்க உதவும் ஒரு முக்கிய மத்திய உதவித்தொகை திட்டம் 14 க்கும் மேற்பட்ட மாநிலங்களில் மூடப்பட்டுள்ளது.
இந்தியாவில் பழங்குடி மக்களும், பட்டியலினத்தவர்களும் கல்வி கற்கக் கூடாது என்பதே பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ்.,-ன் நோக்கமாக உள்ளது. எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகையினை நிறுத்துவது அவர்களின் கல்விக்கு முடிவு கட்டுவதற்கான வழி என பதிவிட்டுள்ளார்.
Related Tags :