செய்திகள்
நீட்தேர்வு முடிவு

மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியீடு

Published On 2020-10-16 16:47 IST   |   Update On 2020-10-16 16:47:00 IST
கடும் எதிர்ப்பையும் மீறி நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்ட நிலையில், இன்று அதற்கான முடிவு வெளியிடப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றால் இந்தியா பாதித்துக் கொண்டிருக்கும் நிலையில், நீட் தேர்வை மத்திய தேர்வு முகமை நடத்த திட்டமிட்டது. எதிர்க்கட்சிகள், மாணவர்களின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையிலும் கட்டாயம் தேர்வு நடத்தியே தீர்வோம் என உறுதியாக இருந்தது.

உச்சநீதிமன்றத்தில் நீட் தேர்வுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. கோர்ட் மத்திய தேர்வு முகமைக்கு ஆதரவான தீர்ப்பை வழங்கியது. இதனால் கடந்த மாதம் நீட் தேர்வு நடத்தப்பட்டது. அப்போது தேர்வை எழுத முடியாதவர்களுக்கு கடந்த 12-ந்தேதி வாய்ப்பு வழங்கப்பட்டது.

இந்நிலையில் இன்று மாலை 4 மணிக்கு நீட் தேர்வு முடிவு வெளியிடப்பட்டது. மாணவர்கள் தேர்வு முடிவுகளை http://ntaneet.nic.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

Similar News