செய்திகள்
சிறப்பு விசாரணைக் குழுவினர் விசாரணை நடத்திய காட்சி

ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை- விசாரணையை நிறைவு செய்தது சிறப்பு விசாரணைக் குழு

Published On 2020-10-16 07:11 GMT   |   Update On 2020-10-16 07:11 GMT
ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை தொடர்பான விசாரணை அறிக்கையை சிறப்பு விசாரணைக் குழுவினர் விரைவில் அரசிடம் தாக்கல் செய்ய உள்ளனர்.
லக்னோ:

உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் பட்டியலினத்தைச் சேர்ந்த இளம்பெண், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அந்த பெண்ணின் மரணத்திற்கு நீதி கேட்டு நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன. பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கு மாநில காவல்துறையிடம் இருந்து சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது. 

ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை குறித்து விசாரிப்பதற்காக மாநில உள்துறை செயலாளர் தலைமையில் சிறப்பு விசாரணைக் குழுவை மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் ஏற்கனவே அமைத்திருந்தார். இந்த குழுவினர் அனைத்து கோணங்களிலும் தீவிர விசாரணை நடத்தினர். 

பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் பொதுமக்களிடம் நடத்தப்பட்ட விசாரணை இன்று நிறைவடைந்துள்ளது. விசாரணை அறிக்கையை விரைவில் அரசிடம் தாக்கல் செய்ய உள்ளனர்.
Tags:    

Similar News