செய்திகள்
கோப்புப்படம்

டெல்லி சுற்றுவட்டாரத்தில் காற்றின் தரத்தை ஆய்வு செய்ய 50 குழுக்கள் - இன்று முதல் சுற்றுப்பயணம்

Published On 2020-10-15 00:57 GMT   |   Update On 2020-10-15 00:57 GMT
டெல்லி சுற்றுவட்டாரத்தில் காற்றின் தரத்தை கள ஆய்வு செய்வதற்கு 50 குழுக்கள் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தால் அமைக்கப்பட்டு உள்ளன.
புதுடெல்லி:

டெல்லியில் காற்றின் தரக்குறியீடு குளிர்காலத்தில் மிகவும் மோசமாக இருக்கும். அதற்கான அறிகுறிகள் தற்போதே தென்பட்டுவிட்டன. எனவே, காற்றின் தரத்தை மேம்படுத்துவது தொடர்பான விழிப்புணர்வு பிரசாரத்தை டெல்லி அரசு மேற்கொண்டு உள்ளது.

இந்த நிலையில், மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம், காற்றின் தரத்தை கள ஆய்வு செய்வதற்கு 50 குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த குழுவினர் இன்று முதல் (வியாழக்கிழமை) வருகிற பிப்ரவரி 28-ந் தேதி வரை டெல்லி மற்றும் தலைநகரை ஒட்டியுள்ள பிற மாநில நகரங்களில் விரிவான கள ஆய்வை மேற்கொள்ள உள்ளனர்.

குப்பைகள் மற்றும் கட்டுமானக் கழிவுகளை சாலைகள் மற்றும் திறந்தவெளிகளில் கொட்டுதல், தொழில்துறை கழிவுகளை திறந்த வெளியில் எரித்தல் போன்ற மாசுபடுத்தும் முக்கிய ஆதாரங்களை இவர்கள் திரட்ட இருக்கிறார்கள். இதுகுறித்து உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு பரிந்துரை செய்யப்படவும் உள்ளது. இதற்காக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் ஒரு கட்டுப்பாட்டு அறையும் திறக்கப்படுகிறது.
Tags:    

Similar News