செய்திகள்
கோப்புப்படம்

உத்தரபிரதேச மந்திரி ராம் நரேஷ் அக்னிகோத்ரிக்கு கொரோனா

Published On 2020-10-14 00:24 GMT   |   Update On 2020-10-14 00:24 GMT
உத்தரபிரதேச மாநில மந்திரி ராம் நரேஷ் அக்னிகோத்ரிக்கு இரண்டாவது முறையாக பரிசோதனை செய்யப்பட்டதில் கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது.
லக்னோ:

உத்தரபிரதேச மாநிலத்தில் கலால் துறை மந்திரியாக இருப்பவர் ராம் நரேஷ் அக்னிகோத்ரி. இவர் கடந்த 6-ந்தேதி டெல்லியில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் பரிசோதனை செய்தபோது அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. உடனே அந்த மருத்துவமனையில் சிகிச்சை பெறத் தொடங்கினார். நேற்று இரண்டாவது முறையாக அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது அவருக்கு இன்னும் கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது.

இருப்பினும் விரைவில் குணமடைந்து பணிக்கு திரும்புவேன் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஏற்கனவே உத்தரபிரதேச மாநில முதல் மந்திரியும், பாஜ.க. தலைவருமான கல்யாண் சிங் கொரோனா தொற்றுக்கு ஆளாகி திங்கட்கிழமைதான் குணமடைந்து திரும்பியிருப்பது குறிப்பிடத்தக்கது. அங்கு மேலும் சில மந்திரிகளும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
Tags:    

Similar News