செய்திகள்
கோப்புபடம்

இந்திய போர் விமானங்கள் பற்றி பாகிஸ்தானுக்கு தகவல் - எச்.ஏ.எல். நிறுவன ஊழியர் கைது

Published On 2020-10-09 23:09 GMT   |   Update On 2020-10-10 01:39 GMT
இந்திய போர் விமானங்கள் பற்றி பாகிஸ்தானுக்கு தகவல் கொடுத்த எச்.ஏ.எல். நிறுவன ஊழியரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மும்பை:

நாசிக்கில் செயல்பட்டு வரும் எச்.ஏ.எல். நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உளவு அமைப்புடன் தொடர்பில் இருப்பதாக நாசிக் பயங்கரவாத தடுப்பு பிரிவினருக்கு நம்பத்தகுந்த தகவல்கள் வந்தன. இதையடுத்து போலீசார் அந்த ஊழியரை நாசிக்கில் உள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்தனர். அவரது பெயர் தீபக் ஷிர்சாத் (வயது 41) என்றும், அவர் உதவி மேற்பார்வையாளராக பணி புரிந்து வந்ததும் தெரியவந்தது.

பின்னர் நடந்த விசாரணையில், அவர் இந்திய போர் விமானங்கள் பற்றிய ரகசிய தகவல்கள் மற்றும் நாசிக், ஒஜ்கார் பகுதியில் உள்ள எச்.ஏ.எல். நிறுவன உற்பத்தி பிரிவு பற்றிய தகவல்களையும் ஐ.எஸ்.ஐ. அமைப்பிற்கு வழங்கி வந்தது தெரியவந்தது.

கைது செய்யப்பட்ட எச்.ஏ.எல். ஊழியரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவர் 10 நாட்கள் போலீஸ் காவலுக்கு ஒப்படைக்கப்பட்டார்.
Tags:    

Similar News