செய்திகள்
மோசடி

இன்சூரன்ஸ் ஏஜென்ட் போல் பேசி முதியவரிடம் ரூ. 6 கோடி மோசடி செய்த 17 வயது சிறுவன்

Published On 2020-09-11 17:34 GMT   |   Update On 2020-09-11 17:34 GMT
இன்சூரன்ஸ் நிறுவன ஏஜெண்ட் என ஏமாற்றி 17 வயது சிறுவன் 86 வயது முதியவர் ஒருவரிடம் ரூ.6 கோடி மோசடி செய்த சம்பவம் டெல்லியில் நடந்துள்ளது
டெல்லியில் 17 வயது சிறுவனும் அவரது நண்பர்கள் சிலரும் இன்சூரன்ஸ் நிறுவனம் என்ற பெயரில் மோசடியில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக அவர்கள் 86 வயது முதியவரை தொடர்பு கொண்டு இன்சூரன்ஸ் நிறுவனத்தில் இருந்து பேசுவதாகவும் அதற்காக வங்கிக்கணக்கு தொடர்பான தகவல்கள் வேண்டுமென்றும் கேட்டுள்ளனர். இதற்காக அவர்கள் ஒரு கால்செண்டரையே நடத்தியுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

முதியவரிடம் போன் செய்து வங்கித் தகவல்களை சேகரித்தவர்கள் அதில் உள்ள பணத்தை தாங்கள் ஏற்கனவே வைத்திருந்த வங்கிக்கணக்கில் மாற்றியுள்ளனர். அந்த வங்கிக் கணக்குகளும் போலியான ஆவணங்கள் மூலம் உருவாக்கப்பட்டவை.

இதற்காக அவர்கள் 35-க்கும் மேற்பட்ட வங்கிக்கணக்குகளை உருவாக்கியுள்ளனர். பிறகு அவர்கள் வங்கிக்கணக்கில் இருந்து ஏடிஎம் மூலம் பணத்தை எடுத்துள்ளனர். மிகப்பெரிய மோசடி என குறிப்பிட்ட காவலர்கள் இது தொடர்பாக தீவிரமாக விசாரணையை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News