செய்திகள்
மந்திரி மதன் கவுசிக்

உத்தரகாண்ட் மந்திரிக்கு கொரோனா - எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் அனுமதி

Published On 2020-09-08 06:02 IST   |   Update On 2020-09-08 06:02:00 IST
உத்தரகாண்ட் நகர்ப்புற வளர்ச்சித்துறை மந்திரி மதன் கவுசிக்கிற்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
டேராடூன்:

நாடு முழுவதும் கொரோனா பரவி வரும் நிலையில் உத்தரகாண்ட் மாநிலத்திலும் கொரோனா கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. அங்கு இதுவரை 24 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. மேலும் கொரோனாவுக்கு இதுவரை 341 பேர் பலியாகி உள்ளனர்.

இந்த நிலையில் மாநில நகர்ப்புற வளர்ச்சித்துறை மந்திரி மதன் கவுசிக்கிற்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் ரிஷிகேஷில் உள்ள எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். கொரோனா தொற்று உடையவருடன் தொடர்பில் இருந்ததையடுத்து மந்திரி தனக்கு பரிசோதனை செய்து கொண்டார்.

உத்தரகாண்ட் அரசின் செய்திதொடர்பாளராகவும் இருக்கும் மதன் கவுசிக், அடிக்கடி பத்திரிகையாளர்களையும், ஆளும் பா.ஜ.க. நிர்வாகிகளையும் சந்தித்து பேசியிருப்பதால், அவர்களும் பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

மகன் மற்றும் மருமகளுக்கு கொரோனா இருப்பதால் மற்றொரு உத்தரகாண்ட் மந்திரி சுபோத் உனியால் தன்னை தனிமைப்படுத்தி கொண்டுள்ளார்.

Similar News