செய்திகள்
ராஜஸ்தான் மாநில பாஜக தலைவர் சதீஸ் பூனியா

ராஜஸ்தான் மாநில பாஜக தலைவர் சதீஸ் பூனியாவுக்கு கொரோனா தொற்று உறுதி

Published On 2020-09-04 12:11 IST   |   Update On 2020-09-04 12:11:00 IST
ராஜஸ்தான் மாநில பாஜக தலைவர் சதீஸ் பூனியாவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஜெய்ப்பூர்:

இந்தியாவில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. கொரோனா தொற்றால் மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள், அமைச்சர்கள் என மக்கள் பிரதிநிதிகளும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.  

இந்த நிலையில், ராஜஸ்தான் மாநில பாஜக தலைவர் சதீஸ் பூனியாவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பாஜக தலைவர் சதீஸ் பூனியா கூறியதாவது:- 

நான் கொரோனா பரிசோதனை செய்து கொண்டேன் அதில், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  எனக்கு அறிகுறிகள் ஏதும் இல்லை என்பதால் மருத்துவர்கள் ஆலோசனைப்படி வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன்.  கடந்த காலங்களில் என்னை தொடர்பு கொண்டவர்கள், கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுங்கள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

Similar News