செய்திகள்
கோப்பு படம்

"நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விளைவிப்போருக்கு அவர்கள் மொழியிலேயே பதிலடி" - பிரதமர் மோடி

Published On 2020-08-15 07:23 GMT   |   Update On 2020-08-15 07:23 GMT
இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விளைவிப்பவர்களுக்கு அவர்கள் மொழியிலேயே பதிலடி கொடுக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்தார்.
புதுடெல்லி:

இந்தியாவின் 74-வது சுதந்திர தினத்தையொட்டி பிரதமர் நரேந்திர மோடி டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடியேற்றினார். அதன்பின் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றினார்.

சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி கூறியதாவது:-

எல்லைக்கட்டுப்பாட்டு கோடு முதல் உண்மையான எல்லைக்கட்டுப்பாடு கோடு வரை நமது நாட்டின் இறையான்மைக்கு எதிராக பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விளைவிப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு அவர்களது மொழியிலேயே நமது வீரர்கள் பதிலடி கொடுத்துள்ளனர்.

எங்களுக்கு இந்தியாவின் ஒருமைப்பாடுதான் முக்கியம். இதற்காக நமது வீரர்கள் என்ன செய்வார்கள் என்பதையும், நாடு என்ன செய்யும் என்பதையும் இந்த உலகம் லடாக்கில் பார்த்துள்ளது. (கடந்த ஜூலை 15 ஆம் தேதி லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய-சீன வீரர்கள் இடையே மோதல் ஏற்பட்டது)

ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தரமற்ற உறுப்பினராக தேர்வு செய்ய 192 நாடுகளில் 184 நாடுகள் இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்தது உலக நாடுகள் இந்தியாவுடன் இருப்பதற்கான சான்று ஆகும்

என தெரிவித்தார்.   

Tags:    

Similar News