செய்திகள்
மத்திய மந்திரி ஹர்ஷ் வர்தன்

உலக சுகாதார அமைப்பின் நிர்வாக வாரிய தலைவராக ஹர்ஷ வர்தன் தேர்வு

Published On 2020-05-19 21:35 GMT   |   Update On 2020-05-19 22:25 GMT
உலக சுகாதார அமைப்பின் நிர்வாக வாரிய தலைவராக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை மந்திரி ஹர்ஷ் வர்தன் தேர்வு செய்யப்பட்டார்.
புதுடெல்லி:

உலக சுகாதார அமைப்பின் நிர்வாக வாரிய தலைவராக பதவ் வகித்து வருபவர் ஜப்பான் நாட்டை சேர்ந்த ஹிரோகி நகாடானி. இந்த குழுவில் சுமார் 34  நாடுகள் உறுப்பினர்களாக உள்ளனர்.

இதற்கிடையே, ஐக்கிய நாடுகள் சபையில் உலக சுகாதார அமைப்பின் 2 நாள் மாநாடு மே 22-ம் தேதி நடக்க உள்ளது.

இந்நிலையில்,  உலக சுகாதார அமைப்பின் நிர்வாக வாரிய தலைவராக இந்தியாவை சேர்ந்த மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை மந்திரி ஹர்ஷ் வர்தன் தேர்வு செய்யப்பட்டு உள்ளார். இவர் வரும் 22-ம் தேதி பதவியேற்க உள்ளார்.
Tags:    

Similar News