செய்திகள்
சரத்பவார்

கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா மோசமாக இருக்கிறது- சரத்பவார் கவலை

Published On 2020-04-22 08:43 IST   |   Update On 2020-04-22 08:43:00 IST
கொரோனா பாதிப்பில் நாட்டின் மற்ற பகுதிகளை விட மகாராஷ்டிராவின் நிலைமை கவலை அளிக்கும் வகையில் உள்ளதாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கூறியுள்ளார்.
மும்பை :

நாட்டின் மற்ற பகுதிகளை விட மகாராஷ்டிராவில் கொரோனா வைரசின் பரவல் மற்றும் உயிரிழப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது தொடர்பாக மகாராஷ்டிராவில் ஆளும் கூட்டணி கட்சியான தேசியவாத காங்கிரசின் தலைவர் சரத்பவார் கவலை தெரிவித்து தனது பேஸ்புக் பதிவில் கூறியிருப்பதாவது:-

மேற்கத்திய நாடுகளுடன் ஒப்பிடுகையில், மகாராஷ்டிராவில் கொரோனா வைரஸ் பரவல் கட்டுக்குள் இருக்கிறது. என்றாலும் இந்தியாவின் மற்ற பகுதிகளை விட இங்கு அதன் பரவல் அதிமாக இருப்பது கவலை அளிக்கிறது.

மும்பை, தானே, கல்யாண்-டோம்பிவிலி, புனே போன்ற நகரங்கள் இந்த வைரஸ் நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன.

இந்த பகுதிகளில் ஊரடங்கு கடுமையாக பின்பற்ற வேண்டும். இறப்பு விகிதத்தை பூஜ்ஜியத்திற்கு கொண்டு வருவதில் இந்த பகுதிகளை சேர்ந்த மக்கள் உறுதியாக இருக்க வேண்டும்.

ஜனாதிபதி மாளிகையிலும் இந்த நோய் பரவலை கவனத்தில் கொள்ள வேண்டி இருக்கிறது. 2 பேருக்கு இடையிலான சமூக விலகல் முறையாக பின்பற்றப்படவில்லை. இதனால் தான் இந்த வைரஸ் தொற்று வேகமாக பரவுகிறது. நாம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மக்கள் வீடுகளை விட்டு வெளியே செல்ல கூடாது.

இவ்வாறு அதில் அவர் தெரிவித்து உள்ளார். 

Similar News