செய்திகள்
முக கவசங்கள்

மாஸ்க் அணியாவிட்டால் பெட்ரோல், டீசல் கிடையாது - புவனேஷ்வர் பெட்ரோலிய நிறுவனங்கள் அதிரடி

Published On 2020-04-10 13:05 GMT   |   Update On 2020-04-10 13:05 GMT
கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதன் ஒரு பகுதியாக, மாஸ்க் அணியாத வாடிக்கையாளர்களுக்கு இனி பெட்ரோல் கிடையாது என புவனேஷ்வர் பெட்ரோலிய நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
புவனேஷ்வர்:

சீனாவின் வுகான் நகரில் உருவான கொரோனா வைரசால் உலகம் முழுவதும் கடும் பாதிப்படைந்து வருகிறது. இந்த வைரசால் பாதிக்கப்பட்டோர்  எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

கொரோனா வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையாக இந்தியா முழுவதும் 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
 
ஆனாலும், கொரோனா தொற்று அறிகுறியுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களுக்கு அடுத்தடுத்து நோய்த்தொற்று உறுதி செய்யப்படுவதால் கடந்த சில நாட்களாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இந்நிலையில், கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதன் ஒரு பகுதியாக, மாஸ்க் அணியாத வாடிக்கையாளர்களுக்கு இனி பெட்ரோல் கிடையாது என புவனேஷ்வர் பெட்ரோலிய நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

இதுதொடர்பாக, அந்த நிறுவனங்களின் உரிமையாளர்கள் கூறுகையில், கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் வகையில் பெட்ரோல் பங்க்களுக்கு வரும் வாடிக்கையாளர்கள் இனி கட்டாயம் மாஸ்க் அணிந்து வரவேண்டும். அப்படி மாஸ்க் அணிந்து வராதவர்களுக்கு பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு ஆகியவை வழங்கப்படாது.

எங்கள் பணியாளர்கள்தான் உண்மையான ஹீரோக்கள். அவர்களை காக்கவும், வாடிக்கையாளர்களின் நலனுக்காகவும் இந்த முடிவை எடுத்துள்ளோம் என தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News