செய்திகள்
கொரோனா வைரஸ்

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 704 பேருக்கு கொரோனா பாதிப்பு - 28 பேர் பலி

Published On 2020-04-06 20:12 IST   |   Update On 2020-04-07 00:33:00 IST
இந்தியாவில் இதுவரை இல்லாத வகையில் கடந்த 24 மணி நேரத்தில் 704 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், 28 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் இதுவரை இல்லாத வகையில் கடந்த 24 மணி நேரத்தில் 704 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், 28 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் நாளுக்குள் நாள் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே உள்ளன. அடுத்த இரண்டு வாரங்கள் மிகவும் கடினமான வாரங்கள். இதைக் கடந்து விட்டால் மிகப்பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என நிபுணர்கள் கணித்துள்ளனர்.



ஆனால் கடந்த ஒருவாரமாக இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே உள்ளன. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 704 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். 24 மணி நேரத்தில் இவ்வளவு அதிகரித்தது இப்போதுதான். இதனால் மத்திய அரசு நடவடிக்கையை அதிகரித்துள்ளது.

இந்தியாவில் தற்போது வரை 4281 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 318 பேர் குணமடைந்தவர்கள், மருத்துவமனையில் இருந்து அனுப்பப்பட்டவர்கள், பலியானோர் எண்ணிக்கை 111 ஆகியவை அடங்கும்.

Similar News