செய்திகள்
கோப்புபடம்

பிரதமர் கூறியபடி மெழுகுவர்த்தி ஏற்றினால் வெப்பத்தில் கொரோனா செத்துவிடும் - பா. ஜனதா எம்.எல்.ஏ விளக்கம்

Published On 2020-04-05 18:49 GMT   |   Update On 2020-04-05 18:49 GMT
பிரதமர் கூறியபடி மெழுகுவர்த்தி ஏற்றினால் வெப்பத்தில் கொரோனா செத்துவிடும் என பா.ஜனதா எம்.எல்.ஏ அதிரடி விளக்கம் கொடுத்துள்ளார்.
மைசூரு:

இந்தியாவில் வேகமாகப் பரவிவரும் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் 21 நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், தொலைக்காட்சி வாயிலாக மக்களிடம் பேசிய பிரதமர் மோடி, ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் மின் விளக்குகளை அணைத்துவிட்டு மெழுகுவர்த்தி அல்லது மொபைல்டார்ச் மூலம் விளக்குகளை ஒளிரச் செய்ய வேண்டும் என்று பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

பிரதமரின் அறிவிப்பில் எந்த அறிவியல் காரணங்களும் இல்லை. மக்களின் ஒற்றுமையை விளக்குவதற்கு இந்த வேண்டுகோள் என்று மத்திய அரசு விளக்கமளித்திருந்தது. இருப்பினும், பிரதமரின் அறிவிப்புக்கு பின்னணியில் சிலர் அறிவியல் காரணங்களை உருவாக்கிவருகின்றனர்.

இந்தநிலையில், கர்நாடாக மாநிலம் மைசூரு தொகுதியின் பா.ஜனதா எம்.எல்.ஏ ராம்தாஸ பேசும் போது

மோடியின் வேண்டுகோளின்படி மக்கள் மெழுகுவர்த்திகளை ஏற்றவேண்டும். மெழுகுவர்த்தி உருவாக்கும் வெப்பத்தின் மூலம் கொரோனா வைரஸ் செத்துவிடும். என்னுடைய கணிப்பு அறிவியல்பூர்வமானது’என்று தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News