செய்திகள்
நிர்பயா வழக்கு குற்றவாளிகள்

‘நிர்பயா’ குற்றவாளிகளை தூக்கிலிடும் ஊழியர் திகார் சிறை வருகை

Published On 2020-01-31 03:23 GMT   |   Update On 2020-01-31 03:23 GMT
‘நிர்பயா’ குற்றவாளிகளை தூக்கிலிடும் ஊழியர் பவன்ஜலந்த் மீரட்டில் இருந்து திகார் சிறைக்கு வந்தார். சிறை வளாகத்தில் தங்கும் அவர், தூக்கில் போட பயன்படுத்தப்படும் கயிறு மற்றும் மற்ற பொருட்களை ஆய்வு செய்வார் என்று சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
புதுடெல்லி :

‘நிர்பயா’ பாலியல் கொலை வழக்கு குற்றவாளிகள் முகேஷ் குமார் சிங், பவன் குப்தா, வினய் குமார் சர்மா, அக்‌ஷய் குமார் சிங் ஆகிய 4 பேரையும் நாளை (சனிக்கிழமை) தூக்கில் போட டெல்லி கோர்ட்டு மரண வாரண்டு பிறப்பித்தது. இதற்கான ஏற்பாடுகள் டெல்லி திகார் சிறையில் நடந்து வருகிறது.

உத்தரபிரதேச மாநிலம் மீரட் சிறையில் பணிபுரியும் ஊழியர் பவன்ஜலந்த் என்பவர் தான் 4 பேரையும் தூக்கில் போட உள்ளார். மீரட்டில் இருந்து நேற்று அவர் திகார் சிறைக்கு வந்தார்.

சிறை வளாகத்தில் தங்கும் அவர், தூக்கில் போட பயன்படுத்தப்படும் கயிறு மற்றும் மற்ற பொருட்களை ஆய்வு செய்வார் என்று சிறை அதிகாரிகள் தெரிவித்தனர். பவன்ஜலந்த் மூன்றாம் தலைமுறையாக தூக்கிலிடும் ஊழியராக வேலை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News