செய்திகள்
மாயாவதி

அசாம்கான் அனைத்து பெண்களிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும் - மாயாவதி

Published On 2019-07-26 16:26 GMT   |   Update On 2019-07-26 16:26 GMT
பெண் எம்.பி.யிடம் சர்ச்சைக்குரிய விதமாக பேசிய அசாம்கானுக்கு மாயாவதி கண்டனம் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற மக்களவையில் நேற்று  சபாநாயகர் இருக்கையில் இருந்து சபையை வழிநடத்திய பா.ஜனதா பெண் எம்.பி. ரமாதேவியிடம் சமாஜ்வாடி கட்சியின் மூத்த தலைவரான அசாம்கான் சர்ச்சைக்கிடம் அளிக்கிற வகையில் பேசினார். இது மக்களவையில் தொடர்ந்து 2–வது நாளாக புயலைக்கிளப்பியது. இதுபோன்ற பேச்சுக்களை சகித்துக்கொள்ள முடியாது என மத்திய அமைச்சர்கள்  நிர்மலா சீதாராமன், ஸ்மிருதி இரானி வலியுறுத்தியுள்ளனர். அசாம் கான் மன்னிப்பு கேட்க வேண்டும், இதுபோன்று இனி யாரும் பேசாத வகையில் நடவடிக்கை இருக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர். 

இந்த நிலையில் அசாம்கானுக்கு, பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள செய்தியில், ‘‘அசாம்கான், மக்களவையை தலைமை தாங்கி வழிநடத்திக்கொண்டிருந்த பெண் எம்.பி.க்கு எதிராக பயன்படுத்திய அநாகரிகமான வார்த்தைகள் பெண்களின் கவுரவத்தையும், மரியாதையையும் புண்படுத்தியது. இது மிகவும் கண்டனத்துக்கு உரியது. இதற்காக அவர் பாராளுமன்றத்தில் மன்னிப்பு கேட்டால் மட்டும் போதாது; எல்லா பெண்களிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும்’’ எனக் கூறியுள்ளார். 
Tags:    

Similar News