செய்திகள்
சபாநாயகர் ஓம் பிர்லா

எம்.பி.க்களை பேச அழைப்பது உங்கள் வேலை அல்ல - மத்திய மந்திரியிடம் அறிவுறுத்திய சபாநாயகர்

Published On 2019-07-01 22:28 GMT   |   Update On 2019-07-01 22:28 GMT
எந்த உறுப்பினரையும் பேசுங்கள் அல்லது பேசாதீர்கள் என்று தயவுசெய்து நீங்கள் உத்தரவிட வேண்டாம் என மத்திய மந்திரி ரமேஷ் பொக்ரியாலிடம் சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்தார்.
புதுடெல்லி:

மக்களவையில் நேற்று மத்திய மனிதவள மேம்பாட்டு மந்திரி ரமேஷ் பொக்ரியால், மத்திய கல்வி நிலையங்கள் சட்ட மசோதாவை தாக்கல் செய்து அதன் மீதான விவாதத்தில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது குறுக்கிட்ட தேசியவாத காங்கிரஸ் எம்.பி. சுப்ரிலா சுலேவை அவர் பேசும்படி கூறிவிட்டு தனது இருக்கையில் அமர்ந்தார்.

உடனே சபாநாயகர் ஓம் பிர்லா மத்திய மந்திரி ரமேஷ் பொக்ரியாலை பார்த்து, “எந்த உறுப்பினரையும் பேசுங்கள் அல்லது பேசாதீர்கள் என்று தயவுசெய்து நீங்கள் உத்தரவிட வேண்டாம். அது உங்கள் வேலை அல்ல, அது எனது தனி உரிமை” என்று கூறினார்.
Tags:    

Similar News