செய்திகள்

பிடிக்காத சிகரெட் புகைக்கு இந்தியாவில் ஆண்டுதோறும் 7300 பேர் பலி

Published On 2019-05-31 13:07 GMT   |   Update On 2019-05-31 13:07 GMT
சிகெரெட் பிடிப்பவர்கள் இழுத்துவிடும் புகையால் பாதிக்கப்பட்டு இந்தியாவில் ஆண்டுதோறும் 7300 பேர் உயிரிழப்பதாக தெரியவந்துள்ளது.
புதுடெல்லி:

பீடி, சிகரெட், பான்பராக், ஹன்ஸ் உள்ளிட்ட மெல்லும் புகையிலை பொருட்களால் புற்றுநோய்க்கு உள்ளாகி உலகம் முழுவதும்  கோடிக்கணக்கானவர்கள் பலியாகி வருகின்றன. இதுதவிர புற்றுநோய்சார்ந்த இறப்புகளில் 40 சதவீதம் புகையிலை பழக்கத்தால் உண்டாவதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், சிகெரெட் பிடிப்பவர்கள் இழுத்துவிடும் புகையால் பாதிக்கப்பட்டு இந்தியாவில் ஆண்டுதோறும் 7300 பேர் உயிரிழப்பதாக தெரியவந்துள்ளது.

இப்படி அடுத்தவர்கள் வெளியிடும் பீடி, சிகரெட் புகையை சுவாசிப்பவர்களுக்கு மூச்சுத்திணறல், தொடர் இருமல், ஆஸ்துமா, நுரையீரல் தொற்று, நுரையீரல் அழற்ச்சி நோய் போன்றவை படிப்படியாக ஏற்பட்டு இறுதியில் அது நுரையீரல் புற்றுநோயாக மாறி மரணத்தில் முடிவதாக தேசிய புற்றுநோய் கட்டுப்பாடு திட்டத்தின் ஆலோசகர் நரேஷ் புரோஹித் குறிப்பிட்டுள்ளார்.
Tags:    

Similar News