நாயகன் ஹரிஷ் ஓரி குடும்ப சூழ்நிலை காரணமாக மலை கிராமத்திற்கு செல்கிறார். அங்கிருக்கும் அவரது உறவினர் வீட்டில் தங்கிக் கொண்டு சுமை தூக்கும் வேலையை செய்து வருகிறார்.
இந்நிலையில், அந்த மலை கிராம மக்களை ஏமாற்றி, நிலத்தை அபகரித்து, மக்களை அங்கிருந்து வெளியேற்றி வருகிறார் ஊர் தலைவர். இதை அறிந்த ஹரிஷ் ஓரி மற்றும் அவரது மனைவி அபிராமி போஸ் இருவரும் ஊர் தலைவர் திட்டத்தை முறியடிக்க முயற்சி செய்கிறார்கள்.
இறுதியில் ஹரிஷ் ஓரி, அபிராமி போஸ் இருவரது முயற்சி என்ன ஆனது? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
கதையின் நாயகனாக நடித்திருக்கும் ஹரிஷ் ஓரி, கதாபாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வாக இருக்கிறார். ஹரிஷ் ஓரியின் மனைவியாக நடித்திருக்கும் அபிராமி போஸ், கிராமத்து பெண்ணாக நடித்து கவர்ந்து இருக்கிறார். மலை கிராம மக்கள் பலர் மற்ற கதாபாத்திரங்களில் நடித்து திரைக்கதை ஓட்டத்திற்கு உதவி இருக்கிறார்கள்.
இயக்கம்
அடிப்படை தேவைகள் இல்லாத மலை கிராம மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் சரண்ராஜ் செந்தில்குமார். மலை கிராம மக்களின் வலிகளை சொல்லும் படங்கள் பல வடிவங்களில் பல வந்திருந்தாலும், அவற்றில் இருந்து முற்றிலும் மாறுபட்டு இருக்கும் வகையில், மூலிகை ரசம் உள்ளிட்ட புதிய விசயங்களை சேர்த்து, படத்தை சுவாரஸ்யமாக நகர்த்தி இருக்கிறார்.
இசை
இசையமைப்பாளர் பரத் ஆசிகவன், பின்னணி இசை மூலம் ரசிக்க வைத்து இருக்கிறார்.
ஒளிப்பதிவு
ஒளிப்பதிவாளர் ராம் தேவ், சிறப்பான பங்களிப்பை கொடுத்து இருக்கிறார்.
ரேட்டிங்- 3/5