செய்திகள்

உங்கள் வாக்கு இந்தியாவின் வளர்ச்சியை தீர்மானிக்கும் - மோடி டுவிட்டரில் கருத்து

Published On 2019-05-19 12:30 IST   |   Update On 2019-05-19 12:30:00 IST
உங்கள் வாக்கு இந்தியாவின் வளர்ச்சியை தீர்மானிக்கும் என்று பிரதமர் மோடி டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி:

பாராளுமன்ற தேர்தலில் 7-வது மற்றும் கடைசி கட்ட ஓட்டுப்பதிவு இன்று விறுவிறுப்பாக நடந்தது.

இன்று தேர்தல் நடந்த 59 தொகுதிகளில் பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியும் அடங்கும். இந்த நிலையில் மோடி இன்று காலை தனது டுவிட்டர் பக்கத்தில் வாக்காளர்களுக்கு செய்தி ஒன்றை தெரிவித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

இன்று 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் கடைசி கட்ட ஓட்டுப்பதிவு நடக்கிறது.


இந்த கடைசி கட்ட ஓட்டுப் பதிவில் அதிக அளவில் வாக்குப்பதிவு செய்து சாதனை படைக்க வேண்டும் என்று வாக்காளர்களை வலியுறுத்துகிறேன்.

உங்கள் ஒரு வாக்கு இந்தியாவின் வளர்ச்சியை வரும் ஆண்டுகளில் தீர்மானிக்கும். முதல் முறையாக வாக்களிக்கும் இளம் வாக்காளர்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களிப்பார்கள் என்று நானும் நம்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News