செய்திகள்

இரும்பு பெண்மணி ஐரோம் ‌ஷர்மிளாவுக்கு இரட்டை பெண் குழந்தை

Published On 2019-05-13 13:32 IST   |   Update On 2019-05-13 13:32:00 IST
மணிப்பூரின் இரும்பு பெண்மணி என்று அழைக்கப்படும் ஐரோம் ஷர்மிளாவுக்கு அன்னையர் தினமான நேற்று இரட்டை பெண் குழந்தை பிறந்தது.
பெங்களூர்:

மணிப்பூரின் இரும்பு பெண்மணி என்று அழைக்கப்படுபவர் ஐரோம் ‌ஷர்மிளா.

சிறப்பு ஆயுதப்படை சட்டத்தை திரும்பப் பெறக்கோரி அவர் 16 ஆண்டுகாலம் உண்ணாவிரத போராட்டம் நடத்தினார்.

ஐரோம் ‌ஷர்மிளா மணிப்பூர் மாநில சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை தழுவி இருந்தார். இதையடுத்து அவர் கொடைக்கானலில் தஞ்சம் அடைந்தார்.

கடந்த 2017-ம் ஆண்டு அவர் தேஸ்மந்த் கொட்டின் கோவை கொடைக்கானலில் வைத்து திருமணம் செய்து கொண்டார்.

கர்ப்பமாக இருந்த ஐரோம் ‌ஷர்மிளாவுக்கு பெங்களூர் மருத்துவமனையில் இரட்டை பெண் குழந்தை பிறந்துள்ளது. அன்னையர் தினமான நேற்று அவருக்கு இந்த இரட்டை குழந்தை பிறந்தது.

அந்த குழந்தைகளுக்கு நிக்ஸ் ஷாக்னி, தேரா என்று பெயரிடப்பட்டுள்ளது. முதல் பெண் குழந்தை 2.16 கிலோ எடையுடன் காலை 9.21 மணிக்கும், 2-வது பெண் குழந்தை 2.14 கிலோ எடையுடன் 9.22 மணிக்கு பிறந்ததாகவும், தாயும், குழந்தைகளும் நலமாக இருப்பதாகவும் டாக்டர் தெரிவித்தார்.
Tags:    

Similar News