செய்திகள்

பஞ்சாப் மந்திரி சித்து மீது காலணி வீசிய பெண் கைது

Published On 2019-05-09 04:40 GMT   |   Update On 2019-05-09 04:40 GMT
பஞ்சாப் மந்திரி சித்து அரியானா மாநிலத்தில் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசியபோது, அவர் மீது காலணியை வீசிய பெண் கைது செய்யப்பட்டார். #Sidhu #LokSabhaElections
ரோத்தக்:

அரியானா மாநிலம் ரோத்தக் பாராளுமன்றத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரான தீபேந்தர் ஹூடாவை ஆதரித்து பஞ்சாப் மாநில மந்திரி நஜ்ஜோத் சிங் சித்து பிரசாரம் செய்தார். நேற்று முன்தினம் ரோத்தக்கில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில்  சித்து பேசியபோது, மத்திய பாஜக அரசை தாக்கி பேசினார்.

அப்போது, அங்கு திரண்டிருந்த ஒரு கும்பல், மோடிக்கு ஆதரவாக கோஷம் எழுப்பினர். சிறிது நேரத்தில் அந்த கூட்டத்தில் இருந்த ஒரு பெண், திடீரென சித்துவை நோக்கி செருப்பை வீசினார். ஆனால் அந்த செருப்பு சித்து மீது விழவில்லை. செருப்பை வீசிய பெண்ணை போலீசார் கைது செய்தனர். காங்கிரசார் மோடிக்கு எதிராக பேசி வருவதால் செருப்பை வீசியதாக கூறப்படுகிறது.



சித்து மீது தாக்குதல் நடப்பது இது முதல் முறையல்ல. கடந்த வெள்ளிக்கிழமையன்று அமேதியில் அவர் பிரசாரத்திற்காக சென்றபோது, அவருடன் வந்த வாகனங்கள் மீது தக்காளிகளை வீசி ஒரு கும்பல் தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது. #Sidhu #LokSabhaElections
Tags:    

Similar News