செய்திகள்
எங்கள் எம்எல்ஏக்களை பாஜக, விலைக்கு வாங்க முயற்சி- கெஜ்ரிவால் பகிரங்க குற்றச்சாட்டு
ஆம் ஆத்மி கட்சியின் 7 எம்எல்ஏக்களை பாஜக, விலைக்கு வாங்க முயற்சி செய்தது என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார். #AAP #AravindKejriwal
புது டெல்லி:
டெல்லியில் பாராளுமன்ற தேர்தல் வரும் மே 12ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதையடுத்து பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகளின் முக்கிய தலைவர்கள், பிரமுகர்கள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித் ஷா ஆகியோரிடம் ஒன்றை மட்டும் கூறிக் கொள்கிறேன். எங்கள் கட்சியின் எம்எல்ஏக்களை வாங்குவதற்கான திட்டம் தீட்டுவதை விடுத்து, தேர்தல் களத்தில் நேரடியாக மோதுங்கள். இப்போது மட்டுமல்ல. கடந்த 4 ஆண்டுகளாக நீங்கள் இந்த முயற்சியில் தான் ஈடுபட்டு வருகின்றீர்கள்.
ஒரு நாளுக்கு முன்னர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட பிரதமர் மோடி, மேற்கு வங்காளத்தில் ஆட்சியில் இருக்கும் மம்தா பானர்ஜியின் கட்சியில் 40 எம்எல்ஏக்களை தன்னால் வாங்க முடியும் எனவும், அவர்கள் தன்னுடன் தொடர்பில் தான் இருக்கிறார்கள் எனவும் கூறினார். இது பிரதமர் மோடிக்கு பொருத்தமானது அல்ல.
ஆம் ஆத்மி கட்சி மக்களுக்கு மின்சாரம், குடிநீர், சாலைகள், பள்ளிகள், மருத்துவமனைகள் ஆகியவற்றை நல்ல முறையில் வழங்கி வருகிறது. அதற்காகவே நாங்கள் பாடுபட்டு வருகிறோம். எங்கள் கட்சியின் பணிகள் என்ன என்பது குறித்து மக்களுக்கு தெரியும். நிச்சயம் எங்களுக்கு மக்கள் வாக்களிப்பார்கள். ஆனால், மோடி தனது பெயரை வைத்துக் கொண்டு மட்டுமே வாக்குகள் சேகரிக்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார். #AAP #AravindKejriwal

அந்த வகையில் டெல்லியில் நேற்று ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் சாந்தினி சவுக் பகுதியில் ரோட்ஷோ நடத்தினார். இந்த ரோட்ஷோவில் ஆம் ஆத்மி கட்சி தொண்டர்கள் வழி நெடுக மலர் தூவி அவரை வரவேற்றனர். அதன் பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது:
கடந்த 3 நாட்களில் பாஜக எங்கள் கட்சியின் 7 எம்எல்ஏக்களை சந்தித்து, ஒவ்வொருவருக்கும் தலா ரூ. 10 கோடி என பேரம் பேசி, விலைக்கு வாங்க முயற்சி செய்தனர். பாஜகவினருக்கு எங்கள் கட்சியை உடைக்க, எம்எல்ஏக்களை பிரிக்க வேண்டும் என்பதே நோக்கமாகும்.