செய்திகள்

4-வது கட்ட தேர்தல்: 71 தொகுதிகளில் இன்று மாலை பிரசாரம் ஓய்கிறது

Published On 2019-04-27 11:56 IST   |   Update On 2019-04-27 11:56:00 IST
பாராளுமன்றத்துக்கான 4-வது கட்ட தேர்தலில் 71 தொகுதிகளுக்கான பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவு பெறுகிறது. #Loksabhaelections2019
புதுடெல்லி:

பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படுகிறது. இதுவரை 3 கட்ட வாக்குப்பதிவு முடிந்து விட்டது.

முதல் கட்டமாக கடந்த 11-ந்தேதி 91 தொகுதிகளுக்கும், 2-வது கட்டமாக 18-ந்தேதி 95 தொகுதிகளுக்கும், 3-வது கட்டமாக 23-ந்தேதி 117 தொகுதிகளுக்கும் ஓட்டுப்பதிவு நடந்தது. இதுவரை 303 தொகுதிகளுக்கு தேர்தல் முடிந்து உள்ளது.

4-வது கட்ட ஓட்டுப்பதிவு வருகிற 29-ந்தேதி (திங்கட்கிழமை) நடக்கிறது.

4-வது கட்ட வாக்குப் பதிவில் 71 தொகுதிகளுக்கு தேர்தல் நடக்கிறது. அதன் விவரம் வருமாறு:-

பீகார் (5), ஜம்மு காஷ்மீர் (1), ஜார்க்கண்ட் (3), மத்திய பிரதேசம் (6), மராட்டியம் (17), ஒடிசா (6), ராஜஸ்தான் (13), உத்தரபிரதேசம் (13), மேற்கு வங்காளம் (8).

இந்த 71 தொகுதிகளுக்கான தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவுபெறுகிறது.

இதையொட்டி தலைவர்கள் இறுதிகட்ட பிரசாரத்தில் ஈடுபட்டனர். 4-வது கட்ட தேர்தலுக்காக தேர்தல் கமி‌ஷன் பாதுகாப்பு உள்பட அனைத்து பணிகளிலும் விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளது. #Loksabhaelections2019
Tags:    

Similar News