செய்திகள்

மோடியைவிட தேவேகவுடா சிறந்த பிரதமராக இருந்தார்- குமாரசாமி பேட்டி

Published On 2019-04-20 03:26 GMT   |   Update On 2019-04-20 04:14 GMT
மோடியை விட தனது தந்தை தேவேகவுடா சிறந்த பிரதமராக மக்களுக்கு சேவை செய்ததாக கர்நாடக முதல்வர் குமாரசாமி கூறியுள்ளார். #LokSabhaElections2019 #Kumaraswamy #DeveGowda
ஹூப்ளி:

கர்நாடக முதல்வரும் மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவருமான தேவேகவுடா, ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது:-

எனது தந்தை தேவேகவுடாவின் ஆட்சிக்காலத்தில் நாடு மிகவும் அமைதியாக இருந்தது. ஒரு பயங்கரவாத தாக்குதல் கூட நடைபெறவில்லை. நாட்டின் உள்நாட்டு பாதுகாப்பு விஷயத்திலும் அதிக அக்கறை செலுத்தினார். தற்போதைய பிரதமர் நரேந்திர மோடியை விட மிகவும் சிறப்பாக செயல்பட்டார்.



தேவேகவுடாவின் 10 மாத ஆட்சிக்காலத்தில் என்ன நடந்தது? மோடியின் 5 ஆண்டு கால ஆட்சியில் என்ன நடந்தது? என்பதை ஆவணங்கள் மூலம் தெரிந்துகொள்ளலாம்.

தேவேகவுடா ஆட்சியின்போது இந்தியா-பாகிஸ்தான் இடையே எந்த மோதலும் நடைபெறவில்லை. ஜம்மு காஷ்மீரில் ஒரு குண்டுவெடிப்பு கூட நடக்கவில்லை. நாட்டிற்குள்ளேயும் வெடிகுண்டு தாக்குதல் நடக்கவில்லை.

பாலக்கோட் விமான தாக்குதலை பாராளுமன்றத் தேர்தலில் தனது அரசியல் ஆதாயத்துக்காக மோடி பயன்படுத்துகிறார். இதுவரை எந்த பிரதமரும் இதுபோன்று இந்தியா-பாகிஸ்தான் இடையே நடந்த சண்டையில் ஆதாயம் தேடவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

தேவேகவுடா 1996ம் ஆண்டு ஜூன் 1-ம் தேதி முதல் 1997ம் ஆண்டு ஏப்ரல் 21-ம் தேதி வரை பிரதமராக பதவி வகித்தது குறிப்பிடத்தக்கது. #LokSabhaElections2019 #Kumaraswamy #DeveGowda
Tags:    

Similar News