செய்திகள்

தவித்து நின்ற ஜெட் ஏர்வேஸ் விமானிகள், பணியாளர்கள் 500 பேருக்கு வேலை வழங்கிய ஸ்பைஸ் ஜெட்

Published On 2019-04-19 15:47 GMT   |   Update On 2019-04-19 15:47 GMT
கடன் சுமையால் முடங்கிப்போன ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் பணியாற்றிய 100 விமானிகள் உள்பட 500 பேருக்கு ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் வேலைவாய்ப்பு அளித்துள்ளது. #SpiceJet #SpiceJethires #JetAirways #JetAirwaysemployees #JetAirwayspilots
மும்பை:

கடுமையான நிதி நெருக்கடி மற்றும் கடன் சுமையால் முற்றிலுமாக முடங்கிப்போன ஜெட் ஏர்வேஸ் விமானச்சேவை நிறுவனத்தை சேர்ந்த விமானிகள், பொறியாளர்கள், பணிப்பெண்கள் என சுமார் 2 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பை இழந்ததால் அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகிப் போனது.

இந்நிலையில், ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் மார்க்கெட்டை பிடிக்க  ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. புதிய விமானங்கள் வாங்கவும், வெளிநாடுகளில் இருந்து பல விமானங்களை வாடகைக்கு பெறவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த விமானங்களில் பணியாற்ற ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் முன்னாள் பணியாளர்களுக்கு முன்னுரிமை அளிக்க ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் விரும்பியது. 

அதன் அடிப்படையில் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் முன்னர் பணியாற்றிய 100 விமானிகள் உள்பட 500 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாக ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் தலைவர் அஜய் சிங் இன்று தெரிவித்துள்ளார். #SpiceJet #SpiceJethires #JetAirways #JetAirwaysemployees  #JetAirwayspilots
Tags:    

Similar News