செய்திகள்

பாஜகவை ஆதரிப்பது போல் தேர்தலில் எதிர்க்காற்றை ஏற்படுத்த இம்ரான் கான் சதி - மோடி குற்றச்சாட்டு

Published On 2019-04-17 13:08 GMT   |   Update On 2019-04-17 13:08 GMT
இந்தியா-பாகிஸ்தான் இடையிலான பிணக்குகள் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தீர்க்கப்படும் என நம்புவதாக கூறி தேர்தலில் எதிர்க்காற்றை ஏற்படுத்த இம்ரான் கான் முயற்சிப்பதாக மோடி குறிப்பிட்டுள்ளார். #ImranKhan #ImranKhanremarks #attempttoinfluencepolls #influencepolls #reverseswing #Modi
புதுடெல்லி:

பிரதமர் நரேந்திர மோடி அளித்த சிறப்பு பேட்டி பிரபல ஆங்கில நாளிதழில் இன்று வெளியாகியுள்ளது. அவரை நேர்காணல் செய்த செய்தியாளர், இந்தியா-பாகிஸ்தான் இடையிலான பிணக்குகள் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தீர்க்கப்படும் என நம்புவதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சமீபத்தில் தெரிவித்த கருத்து தொடர்பாக கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த பிரதமர் மோடி, முன்னர் பாகிஸ்தான் பாராளுமன்ற தேர்தலின்போதும் இம்ரான் கான் எனது பெயரை குறிப்பிட்டு அரசியல் ஆதாயத்துக்காக பேசி இருந்தார் என்று நினைவுகூர்ந்தார்.

‘இம்ரான் கான் ஒரு கிரிக்கெட் ஆட்டக்காரர் என்பதை நாம் மறந்துவிட கூடாது. அவர் சமீபத்தில் தெரிவித்த கருத்து, இந்திய தேர்தல்களில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்த முயற்சித்த ‘ரிவர்ஸ் ஸ்விங்’ பந்துவீச்சு போன்றதாகும்.

ஆனால், அப்படிப்பட்ட ‘ரிவர்ஸ் ஸ்விங்’ பந்தைகூட ‘ஹெலிகாப்டர் ஷாட்’ ஆக மாற்ற இந்தியர்களுக்கு தெரியும்’ எனவும் மோடி குறிப்பிட்டார். #ImranKhan #ImranKhanremarks #attempttoinfluencepolls #influencepolls #reverseswing #Modi
Tags:    

Similar News