செய்திகள்
ஒற்றுமைக்கான செய்தியை அனுப்பவே நான் இங்கு வந்திருக்கிறேன் - ராகுல் காந்தி பேட்டி
வயநாட்டில் வேட்பு மனு தாக்கல் செய்ததையடுத்து, ராகுல் காந்தி செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில், ஒற்றுமைக்கான செய்தியை அனுப்புவதற்கே வந்துள்ளதாக கூறியுள்ளார். #Congress #RahulGandhi #Pressmeet
வயநாடு:
பாராளுமன்ற தேர்தலில் கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் களமிறங்கும் ராகுல் காந்தி, பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வேட்பு மனு தாக்கல் செய்வதற்காக தங்கை பிரியங்காவுடன் நேற்றே கோழிக்கோடு வந்து சேர்ந்தார்.
இதையடுத்து ராகுல் காந்தி செய்தியாளர்களிடம் பேட்டி அளிக்கையில் பேசியதாவது:-
தென்னிந்தியாவின் முக்கியத்துவத்தினை உணர்த்தவும், ஒற்றுமை குறித்த செய்தி அனுப்பிடவுமே நான் இங்கு வந்துள்ளேன். சிபிஐ(எம்) எங்களை தாக்கி பேசுவார்கள் என்பது நன்றாக தெரிந்தது தான். இதனை நான் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால், எனது தேர்தல் பிரசாரத்தில் அவர்களை தாக்கி ஒருமுறை கூட பேச மாட்டேன்.
நாட்டின் இரு பெரும் பிரச்சனைகள் விவசாயமும், வேலையின்மையும் தான். விவசாயமக்கள் தங்கள் எதிர்கால நிலை என்னவாகும் என்பதை நினைத்து மிகவும் வருந்துகின்றனர். வேலையின்மையினால் இளைஞர்கள் ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்கு வேலைக்காக இடம் பெயர்ந்து வருகின்றனர். விவசாயிகளும், இளைஞர்களும் மோடியினால் மிகவும் பாதிப்படைந்துள்ளனர். மேலும் ரபேல் ஊழல் குறித்து பதிலளிக்க பாஜக தொடர்ந்து மறுத்து வருகிறது.
இந்தியாவின் அனைத்து பகுதிகளும் ஒன்றே என்பதை வலியுறுத்தவே நான் இங்கு வந்துள்ளேன். இந்த தேர்தலில் 2 தொகுதிகளில் போட்டியிடுவதன் மூலம் வடக்கில் இருந்தும், தெற்கில் இருந்தும் மக்களுக்காக போராடுவேன். இதுவே என் நோக்கமாகும்.
இவ்வாறு அவர் பேசினார். #Congress #RahulGandhi #Pressmeet

இன்று காலை கோழிக்கோட்டில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் வயநாடுக்கு வந்தார் ராகுல். வேட்டி, சட்டை அணிந்து வந்த ராகுலுக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் அங்கிருந்து வேட்பு மனு தாக்கல் செய்யும் அலுவலகம் நோக்கி ஆதரவாளர்களுடன் ஊர்வலமாக சென்றார். ஊர்வலம் தேர்தல் நடத்தும் அலுவலகத்தை அடைந்ததும், ராகுல் காந்தி தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.