செய்திகள்

அகிலேஷ் யாதவுக்கு ரூ.2 கோடி கடன் தரவேண்டும் - முலாயம் சிங்

Published On 2019-04-02 22:10 IST   |   Update On 2019-04-02 22:10:00 IST
உத்தரபிரதேசத்தின் முன்னாள் முதல்வர் அகிலேஷுக்கு 2 கோடி ரூபாய் கடன் தரவேண்டும் என முலாயம் சிங் தனது வேட்பு மனுவுடன் தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளார். #LSpolls #MulayamSingh #AkileshYadav
லக்னோ:

பாராளுமன்ற தேர்தல் வரும் 11-ம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதையடுத்து, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன.

கட்சிகளின் முக்கிய தலைவர்கள் தாங்கள் போட்டியிடும் தொகுதிகளில் தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், பாராளுமன்ற தேர்தலில் உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் மெயின்புரி தொகுதியில் சமாஜ்வாடி கட்சி சார்பில் முலாயம் சிங் யாதவ் போட்டியிடுகிறார்.

இதற்கிடையே, தேர்தலில் போட்டியிட முலாயம் சிங் நேற்று வேட்பு மனுதாக்கல் செய்தார். அப்போது, அவர் தனது வேட்பு மனுவுடன் தாக்கல் செய்துள்ள சொத்துக்கள் குறித்த பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்தார்.

அந்த பத்திரத்தில், முன்னாள் முதல் மந்திரியும், தனது மகனுமான அகிலேஷ் யாதவுக்கு 2.13 கோடி ரூபாய் கடன் தரவேண்டும் என குறிப்பிட்டுள்ளார். #LSpolls #MulayamSingh #AkileshYadav

Similar News