செய்திகள்
நடிகர் பிரகாஷ்ராஜ் பெயர் வாக்காளர்கள் பட்டியலில் 3 இடங்களில் இடம் பெற்று இருப்பதாக புகார்
பெங்களூரு மத்திய எம்.பி. தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் நடிகர் பிரகாஷ்ராஜ் பெயர் வாக்காளர்கள் பட்டியிலில் 3 இடங்களில் இடம்பெற்று இருப்பதாக தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. #LokSabhaElections2019 #PrakashRaj
பெங்களூரு:
நடிகர் பிரகாஷ்ராஜ் பெங்களூரு மத்திய எம்.பி. தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடுகிறார். 3 இடங்களில் வாக்காளர் பட்டியலில் அவரின் பெயர் இடம் பெற்றிருப்பதாக கிரீஷ் குமார் நாயுடு என்பவர் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார்.
நடிகர் பிரகாஷ்ராஜ் பெங்களூரு மத்திய தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். சுயேட்சையாக களத்தில் இறங்கி உள்ள அவருடைய பெயர் சென்னை வேளச்சேரி தொகுதி, பெங்களூரு சாந்திநகர் தொகுதி, தெலுங்கானா மாநிலம் சிரிலிங்கபள்ளி தொகுதிகளில் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. தேர்தல் விதிப்படி இது தவறு.
தேர்தல் அதிகாரி, எங்கள் மனுவின் மீது நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்புகிறோம். இல்லை எனில் நீதிமன்றத்தை நாடுவோம்.
இவ்வாறு அவர் கூறினார். #LokSabhaElections2019 #PrakashRaj