செய்திகள்
பாராளுமன்ற தேர்தல்- காங்கிரஸ் தேர்தல் அறிக்கை நாளை வெளியாகிறது
காங்கிரஸ் தேர்தல் அறிக்கை நாளை வெளியிடப்படுகிறது. இதில் பல்வேறு அதிரடி அறிவிப்புகள் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #LokSabhaElections2019 #congress
புதுடெல்லி:
பிரதான கட்சிகளான பாரதிய ஜனதா, காங்கிரஸ் ஆகியவை இன்னும் தேர்தல் அறிக்கையை வெளியிடவில்லை.
காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை தயாரிக்க முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு தேர்தல் அறிக்கைகளை உருவாக்கியது. இதைத் தொடர்ந்து காங்கிரஸ் காரிய கமிட்டியில் அறிக்கை முன்வைக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது.
மத்திய பா.ஜ.க. அரசு தனது பட்ஜெட்டில் ஏழைகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கும் திட்டத்தை அறிவித்தது.
அதற்கு போட்டியாக காங்கிரஸ், குறைந்தபட்ச வருமான உத்தரவாத திட்டத்தின் கீழ் ஏழை குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம் வழங்கப் போவதாக அறிவித்து உள்ளது. இந்த திட்டம் நாளை வெளியிடப்படும். தேர்தல் அறிக்கையில் இடம் பெற உள்ளது.
இத்துடன் பல வித்தியாசமான திட்டங்களையும் தேர்தல் அறிக்கையில் இடம்பெற செய்துள்ளனர்.
அரசு துறை வேலைவாய்ப்பில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது.
அரசு துறைகளில் காலியாக உள்ள 22 லட்சம் வேலைகளுக்கு 2020-ம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் நிரப்புவது போன்ற அறிவிப்புகளும் வர உள்ளன.
எம்.பி. எம்.எல்.ஏ.க்கள் கட்சி மாறினால் உடனடியாக அவர்களது பதவி பறிபோகும் வகையில் சட்டம் உருவாக்கப்படும் என்ற அம்சமும் தேர்தல் அறிக்கையில் இருக்கிறது.
விவசாயிகள் கடன்கள் ரத்து, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3 சதவீதத்தை சுகாதாரத்துக்கும், 6 சதவீதத்தை கல்விக்கும் ஒதுக்குவது, ஜி.எஸ்.டி. வரிக்காக தனியாக கவுன்சில் அமைத்து இருப்பது போல விவசாயம் மற்றும் கல்விக்கும் கவுன்சில் அமைப்பது.
உரம் மற்றும் விவசாயம் சம்பந்தப்பட்ட பொருட்களுக்கு ஜி.எஸ்.டி.யில் இருந்து வரிவிலக்கு அளிப்பது, விவசாயிகளுக்கு கடன் கிடைக்க எளிதான திட்டங்களும் அறிவிக்கப்படுகிறது.
தொழில்களை மேம்படுத்த பல்வேறு சலுகைகள், வரி விதிப்பில் மாற்றங்கள், முதலீட்டுக்கு அதிக வாய்ப்புகள் போன்ற வாக்குறுதிகளும் தேர்தல் அறிக்கையில் இடம் பெற உள்ளன. #LokSabhaElections2019 #congress

நாளை காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியிடப்படுகிறது. இதில் பல்வேறு அதிரடி அறிவிப்புகள் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.