செய்திகள்

ஜம்மு காஷ்மீரில் சிஆர்பிஎப் வாகன அணிவகுப்பின் அருகே வெடித்துச் சிதறிய கார்

Published On 2019-03-30 14:53 IST   |   Update On 2019-03-30 14:53:00 IST
ஜம்மு காஷ்மீரில் இன்று துணை ராணுவ வீரர்கள் வாகனங்களில் சென்றபோது அந்த வழியாக சென்ற ஒரு கார் திடீரென வெடித்துச் சிதறி தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. #PulwamaAttack #CRPFConvoy
ஜம்மு:

ஜம்மு காஷ்மீரின் ராம்பான் மாவட்டத்தில் இன்று காலை துணை ராணுவ வீரர்கள் (சிஆர்பிஎப்) சுமார் 10 பேருந்துகளில் தங்கள் முகாம் நோக்கி சென்றுகொணடிருந்தனர். காலை 10.30 மணியளவில் பனிஹல் நகரில் சென்றபோது அந்த வழியாக வந்த ஒரு கார் திடீரென வெடித்துச் சிதறி தீப்பிடித்தது. இதனால் பாதுகாப்பு வாகனங்கள் அப்படியே நிறுத்தப்பட்டன. அதில் ஒரே ஒரு பேருந்தின் பின்பகுதி மட்டும் லேசாக சேதம் அடைந்தது. யாருக்கும் காயம் ஏற்படவில்லை.



புல்வாமா மாவட்டத்தில் பிப்ரவரி 14-ம் தேதி 40 சிஆர்பிஎப் வீரர்களை பலி வாங்கிய தற்கொலைத் தாக்குதலை இந்த சம்பவம் நினைவுபடுத்தியதால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. இன்று வெடித்த காரிலும் வெடிகுண்டுகள் மற்றும் ரசாயன பொருட்கள் ஏற்றி வரப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது.

ஆனால், சந்தேகப்படும்படியாக எதுவும் இல்லை. காரில் உள்ள எரிவாயு சிலிண்டர் வெடித்ததால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரிகிறது. எனினும் இந்த சம்பவம் குறித்து, அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. #BlastInCar #JKAccident #PulwamaAttack #CRPFConvoy
Tags:    

Similar News