செய்திகள்

முன்னாள் மத்திய மந்திரி கல்ராஜ் மிஷ்ரா தேர்தலில் போட்டி இல்லை

Published On 2019-03-22 00:54 GMT   |   Update On 2019-03-22 05:40 GMT
உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த பா.ஜனதா மூத்த தலைவர் கல்ராஜ் மிஷ்ரா பாராளுமன்ற தேர்தலில் தான் போட்டியிடப்போவது இல்லை என்று தெரிவித்துள்ளார். #BJP #KalrajMishra
லக்னோ:

உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர், பா.ஜனதா மூத்த தலைவர் கல்ராஜ் மிஷ்ரா. இவர் மத்திய மந்திரியாகவும் பதவி வகித்தவர் ஆவார்.

இவர் கடந்த பாராளுமன்ற தேர்தலில் தியோரியா தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்த தேர்தலில் அவர் போட்டியிடப்போவது இல்லை என்று அறிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் நேற்று செய்தி நிறுவனம் ஒன்றிடம் பேசினார். அப்போது அவர், “நான் அரியானா, மராட்டிய மாநிலங்களில் பாராளுமன்ற தேர்தல் பொறுப்பாளராக இருக்கிறேன். இது தொடர்பான பணியில் தீவிரமாக உள்ளேன். எனவே பாராளுமன்ற தேர்தலில் நான் போட்டியிடப்போவது இல்லை என்று கட்சி மேலிடத்தில் கூறி விட்டேன்” என கூறினார்.

ஏற்கனவே, கல்ராஜ் மிஷ்ராவுக்கு வயது 75-ஐ கடந்து விட்டது என்பதால், பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படாது என தகவல்கள் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News