செய்திகள்

லால் பகதூர் சாஸ்திரியை அவமதித்தார் பிரியங்கா- ஸ்மிருதி இரானி குற்றச்சாட்டு

Published On 2019-03-21 12:30 IST   |   Update On 2019-03-21 12:30:00 IST
உத்தரபிரதேசத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டிருக்கும் பிரியங்கா, லால் பகதூர் சாஸ்திரியை அவமதித்ததாக ஸ்மிருதி இரானி குற்றம் சாட்டியுள்ளார். #SmritiIrani #Priyanka
புதுடெல்லி:

பாராளுமன்ற தேர்தல் நெருங்குவதையொட்டி, நாட்டின் அனைத்து கட்சியினரும் சுறுசுறுப்பாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளரான பிரியங்கா காந்தி, உத்தரபிரதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை நேரடியாக சந்தித்து வாக்கு சேகரிப்பில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றார். முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் சிலைக்கு நேற்று மரியாதை செலுத்தினார். சாஸ்திரி சிலைக்கு மாலை அணிவிக்கும் வீடியோவினை சுட்டிக்காட்டி, மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி கூறியதாவது:



பிரியங்காவின் அகந்தை இந்த வீடியோவில் அவர் செய்யும் செயலில் தெளிவாக தெரிகிறது. தனக்கு அணிவிக்கப்பட்ட மாலையை எடுத்து, லால் பகதூர் சாஸ்திரியின் சிலைக்கு தன் கைகளால் போடுகிறார். இதன்மூலம் பிரியங்கா, மரியாதை செய்வதாக கூறி அவரை அவ மரியாதை செய்துவிட்டார். காங்கிரஸ் கட்சியின் மதிப்பு என்ன என்பதை இந்த செயல் தெளிவாக காட்டுகிறது.

இவ்வாறு அவர் கூறினார். #SmritiIrani #Priyanka
Tags:    

Similar News