செய்திகள்

மனோகர் பாரிக்கர் மறைவு - மத்திய அமைச்சரவை சார்பில் நாளை இரங்கல் கூட்டம்

Published On 2019-03-17 16:21 GMT   |   Update On 2019-03-17 16:21 GMT
முன்னாள் ராணுவ அமைச்சரும் கோவா முதல் மந்திரியுமான மனோகர் பாரிக்கர் மறைவுக்கு மத்திய அமைச்சரவை சார்பில் நாளை இரங்கல் கூட்டம் நடைபெறுகிறது. #GoaCM #ManoharParrikar #RIPManoharParrikar
புதுடெல்லி;

முன்னாள் ராணுவ மந்திரியும் கோவா முதல்-மந்திரியுமான மனோகர் பாரிக்கர் கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டார். கோவா மற்றும் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். அதன்பிறகு, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.

அவருக்கு கணையத்தில் புற்றுநோய் பாதித்திருப்பதாக சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதற்காக சிகிச்சை பெற்றவாறு தனது இல்லத்தில் இருந்தபடி முதல் மந்திரி பணிகளை கவனித்து வந்தார் மனோகர் பாரிக்கர்,

இதற்கிடையே, இன்று மாலை உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால் மனோகர் பாரிக்கர் சிகிச்சை பலனின்றி காலமானார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில், முன்னாள் ராணுவ அமைச்சரும் கோவா முதல் மந்திரியுமான மனோகர் பாரிக்கர் மறைவுக்கு மத்திய அமைச்சரவை சார்பில் நாளை காலை 11 மணியளவில் இரங்கல் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
 
மேலும், மனோகர் பாரிக்கர் மறைவையொட்டி நாளை துக்க தினமாக அனுசரிக்கப்படும் என்றும், தேசிய தலைநகரம் மற்றும் மாநில தலைநகரங்களில் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் எனவும் மத்திய அரசு அறிவித்துள்ளது. #GoaCM #ManoharParrikar #RIPManoharParrikar
Tags:    

Similar News