செய்திகள்

உத்தரபிரதேச மாநிலத்தில் 20 பிரசார கூட்டங்களில் பிரதமர் மோடி பேசுகிறார்

Published On 2019-03-16 22:20 GMT   |   Update On 2019-03-16 22:20 GMT
உத்தரபிரதேச மாநிலத்தில் 20 பிரசார கூட்டங்களில் பிரதமர் மோடி பேசுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. #PMModi
லக்னோ:

உத்தரபிரதேச மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தலில், முதல் கட்டமாக 8 தொகுதிகளில் அடுத்த மாதம் ஏப்ரல் 11-ந்தேதி ஓட்டுப்பதிவு நடக்கிறது. அங்கு பாரதீய ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி பிரசாரம் செய்ய இருக்கிறார். இதுபற்றி பா.ஜ.க மூத்த தலைவர் ஒருவர் கூறும்போது, “பிரதமர் மோடி தன் முதல் பிரசார கூட்டத்தை எந்த இடத்தில், எப்போது தொடங்குவார் என்பது முடிவாகவில்லை, ஆனால் பெரும்பாலும் சகரான்பூரில் உள்ள ஷங்கம்பூரி தேவி கோவிலில் தரிசனம் செய்த பிறகு தான் தேர்தல் பிரசாரத்தை தொடங்குவார். தற்காலிக திட்டப்படி உத்தர பிரதேச மாநிலத்தில் 20 பிரசார கூட்டங்களில் பேசுவார்” என்று தெரிவித்தார்.

கடந்த 2017-ம் ஆண்டில் நடந்த சட்டசபை தேர்தலிலும் பிரதமர் மோடி 12 பிரசார கூட்டங்களில் பேசுவார் என்றே முதலில் முடிவு எடுக்கப்பட்டது, பின் அவர் 21 கூட்டங்களில் உரையாற்றினார்.
Tags:    

Similar News