செய்திகள்

வீடியோவில் பார்த்து பிரசவம் - இளம்பெண், குழந்தை உயிரிழப்பு

Published On 2019-03-12 10:12 IST   |   Update On 2019-03-12 12:18:00 IST
உத்தரபிரதேசம் மாநிலம் பக்ரைச் கிராமத்தைச் சேர்ந்த கர்ப்பிணி பெண் வீடியோவை பார்த்து தனக்கு தானே பிரசவம் பார்த்துள்ளார். இதில் அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு அந்த பெண்ணும், குழந்தையும் உயிரிழந்தனர். #Gorakhpurwoman #Watchingvideo #Delivery
கோரக்பூர்:

உத்தரபிரதேசம் மாநிலம் பக்ரைச் கிராமத்தைச் சேர்ந்த 25 வயது இளம்பெண் ஒருவர் கோரக்பூரில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து இருந்தார். அவர் அரசு போட்டித் தேர்வுகளுக்கு அங்கு தங்கி இருந்து படித்து வந்தார்.

இந்த நிலையில் அப்பெண் தங்கி இருந்த வீட்டில் இருந்து ரத்தம் வெளியே வந்ததை பார்த்த அக்கம் பக்கத்தினர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

போலீசார் அங்கு வந்து கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது அப்பெண்ணும், பிறந்த சில மணி நேரமே ஆன குழந்தையும் இறந்து கிடந்தனர்.

அவரது அறையில் கிடந்த செல்போனை போலீசார் ஆய்வு செய்தபோது அதில், வீட்டிலேயே பிரசவம் பார்த்து குழந்தை பெற்றெடுப்பது எப்படி? என்ற வீடியோ இருந்தது.

விசாரணையில் திருமணமாகாத அந்த பெண் கர்ப்பமாக இருந்துள்ளார். வீட்டிலேயே பிரசவம் பார்க்க முடிவு செய்து இணைய தளத்தில் வீடியோவை பார்த்து தனக்கு தானே பிரசவம் பார்த்துள்ளார்.

இதில் ரத்தப்போக்கு அதிகம் ஏற்பட்டது. பெண்ணும், குழந்தையும் பரிதாபமாக இறந்தனர். இதுகுறித்து அவரது குடும்பத்தினருக்கு போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். #Gorakhpurwoman #Watchingvideo #Delivery


Tags:    

Similar News