செய்திகள்

வட மாநிலங்களில் மீண்டும் விமானச் சேவை தொடர மத்திய அரசு அனுமதி

Published On 2019-02-27 09:50 GMT   |   Update On 2019-02-27 09:50 GMT
பாகிஸ்தான் மிரட்டலை தொடர்ந்து இந்தியாவின் வட மாநிலங்களில் உள்ள சில விமான நிலையங்களில் நிறுத்தி வைக்கப்பட்ட விமானச்சேவைகள் மீண்டும் தொடர மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. #airportsOperations #Operationsresumed
புதுடெல்லி:

இந்திய விமானப்படை பாகிஸ்தானுக்குள் ஊடுருவி நேற்று நடத்திய தாக்குதலின் எதிரொலியாக இன்று இந்தியாவுக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்தவந்த பாகிஸ்தான் நாட்டு போர் விமானம் காஷ்மீர் மாநிலத்தில் உள்ள நவ்ஷேரா எல்லைக்கோட்டுப் பகுதியில் இன்று சுட்டு வீழ்த்தப்பட்டது.

இதைதொடர்ந்து காஷ்மீர் மாநிலத்தில் உள்ள லே, ஜம்மு, ஸ்ரீநகர், பதான்கோட் ஆகிய விமான நிலையங்களில் இன்று காலையில் இருந்து விமானச் சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டன. பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அம்ரிஸ்டர், உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள டேராடூன் மற்றும் சிம்லா உள்ளிட்ட விமான நிலையங்களும் இன்று பிற்பகல் மூடப்பட்டன. இதனால், நூற்றுக்கணக்கான பயணிகள் பாதிக்கப்பட்டனர்.

டெல்லிக்கு வடக்கில் உள்ள வான்வெளியில் விமானங்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், வட மாநிலங்களில் உள்ள 9 விமான நிலையங்களில் நிறுத்தி வைக்கப்பட்ட விமானச்சேவைகள் மீண்டும் தொடர இன்று பிற்பகல் மூன்று மணியளவில் மத்திய அரசு அனுமதிஅளித்துள்ளது.  #airportsOperations #Operationsresumed 
Tags:    

Similar News