செய்திகள்

இந்த வார்த்தையை சொன்னால் சிக்கன் லெக் பீசில் 10 ரூபாய் தள்ளுபடி

Published On 2019-02-22 04:42 GMT   |   Update On 2019-02-22 06:17 GMT
சத்தீஸ்கரைச் சேர்ந்த சாலையோர உணவக உரிமையாளர், பாகிஸ்தான் எதிர்ப்பை மக்களிடம் வித்தியாசமான முறையில் பதிய வைக்கும் முயற்சியில் இறங்கி உள்ளார். #PulwamaAttack #PakistanMurdabad
ஜக்தல்பூர்:

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14-ம் தேதி பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பு நடத்திய தற்கொலைத் தாக்குதலில், துணை ராணுவப் படையைச் சேர்ந்த 40 வீரர்கள் உயிரிழந்தனர்.

இந்த தாக்குதலுக்கு பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். பயங்கரவாதத்தை ஆதரிக்கும் பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்று தொடர்ந்து கூறி வருகின்றனர். போராட்டம், கடையடைப்பு என தொடர்ந்து எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.




இந்நிலையில், சத்தீஸ்கர்  மாநிலம் ஜக்தல்பூரில் உள்ள சிறு உணவக உரிமையாளர், பாகிஸ்தான் எதிர்ப்பை வித்தியாசமான முறையில் வெளிப்படுத்தி உள்ளார். தள்ளுவண்டியில் வைத்து சிக்கன் வறுவல் வியாபாரம் செய்து வரும் அவர், ‘பாகிஸ்தான் ஒழிக’ என கூறும் வாடிக்கையாளர்களுக்கு சிக்கன் லெக் பீசில் 10 ரூபாய் தள்ளுபடி செய்யப்படும் என கூறியுள்ளார்.

இதுபற்றி அவர் கூறும்போது, “மனிதநேயத்தை பாகிஸ்தான் ஒருபோதும் மதிப்பதில்லை. மதிக்க விரும்புவதும் இல்லை. அதனால்தான், பாகிஸ்தான் ஒழிக என அனைவரும் சொல்ல வேண்டும் என்று இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளேன்’ என்றார். #PulwamaAttack #PakistanMurdabad
Tags:    

Similar News