செய்திகள்

டெல்லி-வாரணாசி இடையே வர்த்தக ரீதியான பயணத்தை தொடங்கியது ‘வந்தே பாரத்’ ரெயில்

Published On 2019-02-17 21:16 GMT   |   Update On 2019-02-17 21:16 GMT
வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் டெல்லியில் இருந்து வாரணாசிக்கு இன்று(நேற்று) தனது முதல் வர்த்தகப்பயணத்தை தொடங்கியது. #VandeBharatExpress #Delhi #Varanasi
புதுடெல்லி:

நாட்டின் முதல் அதிவேகமான ரெயிலை சென்னை ஐ.சி.எப் தொழிற்சாலை தயாரித்தது. என்ஜின் இல்லாமல் இயங்கக்கூடிய இந்த ரெயிலுக்கு ‘வந்தே பாரத்’ எனப் பெயரிடப்பட்டது. கடந்த வெள்ளிக்கிழமை டெல்லியில் நடந்த விழாவில் பிரதமர் மோடி ‘வந்தே பாரத்’ எக்ஸ்பிரஸ் ரெயிலைக் கொடியசைத்து தொடங்கி வைத்தார். சோதனை ஓட்டமாக டெல்லியில் இருந்து உத்தரப்பிரதேசத்தின் வாரணாசி நகருக்கு சென்ற வந்தே பாரத் ரெயில், அங்கிருந்து டெல்லிக்கு திரும்பியபோது நடுவழியில் பழுதானது. பின்னர் பழுது நீக்கப்பட்டு டெல்லி கொண்டு வரப்பட்டது.

இந்நிலையில், ‘வந்தேபாரத்’ எக்ஸ்பிரஸ் ரெயில் வர்த்தக ரீதியான தனது முதல் பயணத்தை நேற்று தொடங்கியது. இது குறித்து ரெயில்வே மந்திரி பியூஸ் கோயல் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவிக்கையில், ‘வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் டெல்லியில் இருந்து வாரணாசிக்கு இன்று(நேற்று) தனது முதல் வர்த்தகப்பயணத்தை தொடங்கியது. அடுத்த 2 வாரங்களுக்கு டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துவிட்டன. உங்களுக்கான டிக்கெட்டுகளை இன்றே பெறுங்கள்” என குறிப்பிட்டார். 
Tags:    

Similar News