செய்திகள்
காஷ்மீர் தாக்குதலில் பலியான கேரள வீரர் வசந்தகுமாரையும், அவரது வீட்டையும் படத்தில் காணலாம்.

புல்வாமா தாக்குதலில் பலியாவதற்கு 2 மணி நேரம் முன்பு தாயாருடன் பேசிய கேரள வீரர்

Published On 2019-02-16 09:51 GMT   |   Update On 2019-02-16 09:51 GMT
காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் பலியாவதற்கு 2 மணி நேரம் முன்பு கேரள வீரர் தாயாருடன் செல்போனில் பேசியுள்ளார். #PulwamaAttack #CRPF
திருவனந்தபுரம்:

காஷ்மீர் மாநிலம் ஜம்முவில் இருந்து ஸ்ரீநகருக்கு சி.ஆர்.பி.எப். வீரர்கள் சென்ற பஸ் மீது பயங்கரவாதி நடத்திய தற்கொலை படை தாக்குதலில் 40 வீரர்கள் பலியானார்கள்.

கேரள மாநிலம் வயநாடு பகுதியைச் சேர்ந்த வசந்தகுமார் என்ற வீரரும் இந்த தாக்குதலில் பலியானார்.

பலியான வசந்தகுமாருக்கு மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். இவரது உடல் இன்று சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டு இறுதிச் சடங்கு நடக்கிறது.

வயநாடு, லக்கிடியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி வளாகத்தில் வசந்தகுமார் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்படுகிறது.

பின்னர் ராணுவ மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடக்கிறது. வசந்த குமார் உடலுக்கு அஞ்சலி செலுத்த இன்று காலை முதலே ஏராளமான மக்கள் கண்ணீருடன் காத்திருந்தனர்.



வசந்தகுமார் ஜம்மு தேசிய நெடுஞ்சாலை பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோதுதான் பலியாகி உள்ளார்.

அவர், இறப்பதற்கு 2 மணி நேரத்திற்கு முன்பு தாயார் வசந்தாவுடன் செல்போனில் பேசி உள்ளார். அப்போது ஜம்முவில் மிகவும் குளிராக இருப்பதாக கூறி உள்ளார். தாயாருடன் பேசிய 2 மணி நேரத்தில் நடந்த தற்கொலை படை தாக்குதலில் வசந்தகுமார் பலியாகி இருப்பது தெரிய வந்துள்ளது.  #PulwamaAttack #CRPFAttack
Tags:    

Similar News