செய்திகள்

உ.பி. மற்றும் உத்தரகாண்டில் கள்ளச்சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 34 ஆக அதிகரிப்பு

Published On 2019-02-09 00:14 IST   |   Update On 2019-02-09 00:14:00 IST
உத்தரப்பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலத்தில் கள்ளச்சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ளது என போலீசார் தெரிவித்தனர். #Uttarakand #Illicitliquor
டேராடூன்:

உத்தரகாண்டின் ஹரித்துவார் மாவட்டம் ரூர்கி பகுதியில் கள்ளச்சாராய விற்பனை நடந்து வருகிறது. நேற்று நள்ளிரவு இதை வாங்கிக் குடித்த பலர் உடல்நலம் பாதிக்கப்பட்டனர்.

இதில் 12 பேர் பலியானதாக முதல் கட்டமாக தகவல் வெளியானது. மேலும், 20க்கும் மேற்பட்டோர் கவலைக்கிடமாக உள்ளனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிலரது நிலைமை மோசமடைந்து உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என தெரிவித்தனர்.

இந்நிலையில், கள்ளச்சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ளது. இதில் உத்தரப்பிரதேசத்தின் சஹரான்பூரில் 18 பேரும், உத்தராகண்டில் 16 பேரும் அடங்குவர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

கள்ளச்சாராயம் விற்பனைக்கு துணை போன உள்ளூர் அதிகாரிக 13 பேரை மாவட்ட நிர்வாகம் சஸ்பெண்ட் செய்துள்ளது. இதுதொடர்பாக, வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #Uttarakand #Illicitliquor
Tags:    

Similar News