செய்திகள்

பிரியங்கா வருகையால் அகிலேஷ் யாதவ் மனமாற்றம் - காங்கிரசுடன் கூட்டணி அமைக்க ஆலோசனை

Published On 2019-02-06 05:49 GMT   |   Update On 2019-02-06 05:49 GMT
பிரியங்கா அரசியலில் நுழைந்திருப்பதை பாராட்டிய அகிலேஷ் யாதவ் காங்கிரசுடன் ரகசிய உடன்பாடு செய்துகொள்ள விரும்புவதாக தெரிய வந்துள்ளது. #AkhileshYadav #Congress
புதுடெல்லி:

உத்தரபிரதேச மாநிலத்தில் 80 பாராளுமன்ற தொகுதிகள் உள்ளன. பாராளுமன்ற தேர்தலில் சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ், ராஷ்ட்ரிய லோக்தளம் ஆகிய கட்சிகள் இணைந்து கூட்டணி அமைத்துள்ளன. அகிலேஷ்யாதவும், மாயாவதியும் தலா 38 தொகுதிகளை எடுத்துக்கொண்டு அஜித்சிங்கின் ராஷ்ட்ரிய லோக்தளம் கட்சிக்கு 2 தொகுதிகள் அளித்தன.

சோனியா மற்றும், ராகுல் காந்தி தொகுதியில் மரியாதை நிமித்தமாக வேட்பாளர்களை நிறுத்தப்போவதில்லை என்று அறிவித்தனர்.



இந்தநிலையில் காங்கிரசுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் வகையில் பிரியங்கா தீவிர அரசியலில் இறங்கினார். அவர் காங்கிரஸ் பொதுச்செயலாளராகவும் நியமிக்கப்பட்டார். இதனால் உத்தரபிரதேச மாநிலத்தில் காங்கிரசின் செல்வாக்கு அதிகரித்துள்ளதாக கருதப்படுகிறது. எனவே காங்கிரஸ் அனைத்து தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தப்போவதாக அறிவித்தது.

இதன்காரணமாக உத்தரபிரதேச மாநிலத்தில் மும்முனைப்போட்டி ஏற்பட்டு வாக்குகள் பிரியும் நிலை உருவானது. இது பா.ஜனதாவுக்கு சாதகமாகிவிடும் என்று கருதப்படுகிறது.

பிரியங்காவின் வருகையாலேயே அகிலேஷ் யாதவிடம் இந்த மனமாற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பிரியங்கா அரசியலில் நுழைந்திருப்பதை அகிலேஷ் யாதவ் பாராட்டி இருந்தார். பிரியங்கா வருகையை தொடர்ந்து உத்தரபிரதேசத்தில் காங்கிரசின் செல்வாக்கு உயர்ந்திருப்பதாக அவரும் கருதுகிறார். எனவே காங்கிரசுடன் ரகசிய உடன்பாடு செய்துகொள்ள அவர் விரும்புவதாக தெரிகிறது.

இதுதொடர்பாக சமாஜ்வாடி கட்சி நிர்வாகிகள் கூறுகையில், ‘‘உத்தரபிரதேசத்தில் எங்கள் கூட்டணியில் காங்கிரசையும் சேர்க்கை முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அப்படி முடியாவிட்டால் சமாஜ்வாடி- காங்கிரஸ் இடையே சில தொகுதிகளில் ரகசிய உடன்பாடு செய்ய ஆலோசனை நடந்து வருகிறது’’ என்றனர். #AkhileshYadav #Congress

Tags:    

Similar News