செய்திகள்

டெல்லியில் கால் டாக்சி டிரைவரை கொன்ற லிவ் இன் ஜோடி கைது

Published On 2019-02-05 06:41 GMT   |   Update On 2019-02-05 06:41 GMT
டெல்லியில் ஊபர் கால் டாக்சி டிரைவரை கொலை செய்து, உடலை கழிவுநீர் கால்வாயில் வீசிவிட்டு அவரது காரிலேயே ஊர் சுற்றிய லிவ் இன் ஜோடியை போலீசார் கைது செய்துள்ளனர்.#Delhi #Uberdriverdead
புதுடெல்லி:

டெல்லியில் கடந்த ஜனவரி மாதம் 29ம் தேதி ஊபர் கால் டாக்சி டிரைவர் ராம் கோவிந்த் என்பவரின் மனைவி, தன் கணவரைக் காணவில்லை என காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், ஊபர் வாகனம் கடைசியாக மாதங்கீர் - கபாஷேரா வழித்தடத்தில் பயணம் செய்வதற்காக பதிவு செய்யப்பட்டிருந்ததும், அதன்பின்னர் ஜிபிஎஸ் செயலிழந்திருப்பதும் தெரியவந்தது.

இதனையடுத்து சிசிடிவி காட்சிகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்களின் உதவியோடு, டிரைவரின் செல்போன் மெஹ்ராலி-குருகிராமம் சாலையில் சென்று கொண்டிருப்பதை போலீசார் கண்டறிந்தனர். இதனையடுத்து அங்கு விரைந்த போலீசார், காணாமல் போன டிரைவரின் காரை மடக்கினர். காரில் இருந்த ஒரு ஆண் மற்றும் ஒரு பெண்ணை கைது செய்தனர். அவர்களிடமிருந்து கார் மற்றும் டிரைவரின் செல்போனை பறிமுதல் செய்தனர்.

விசாரணையில் அவர்கள் உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த ஃபர்கத் அலி(40) மற்றும் சீமா ஷர்மா(30) என்பதும், அவர்கள் திருமணம் செய்துகொள்ளாமல் சேர்ந்து வாழும் லிவ் இன் ஜோடி என்பதும் தெரியவந்தது.

இவர்கள், டெல்லி எம்ஜி சாலையில் இருந்து காஸியாபாத்தில் உள்ள தங்கள் வீட்டிற்கு செல்வதற்காக கோவிந்தின் காரை புக் செய்துள்ளனர். காரில் ஏறியதும், கோவிந்தின் கார் மற்றும் செல்போன்களை பறிக்க திட்டம் தீட்டியுள்ளனர். அதன்படி கோவிந்தை வீட்டின் உள்ளே வரவைத்து, மயக்க மருந்து கலந்த டீயை கொடுத்துள்ளனர். கோவிந்த் மயங்கியதும் அவரது கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர். மறுநாள், உடலை துண்டுதுண்டாக நறுக்கி மூன்று பைகளில் வைத்து நொய்டாவில் உள்ள கழிவுநீர் கால்வாயில் போட்டுள்ளனர் என போலீஸ் துணை கமிஷனர் ஆர்யா தெரிவித்துள்ளார். #Delhi #Uberdriverdead

Tags:    

Similar News