செய்திகள்

2 இளம்பெண்கள் மட்டுமே சபரிமலையில் தரிசனம் - கேரள மந்திரியின் தகவலால் குழப்பம்

Published On 2019-02-05 03:00 GMT   |   Update On 2019-02-05 03:00 GMT
தடை செய்யப்பட்ட வயதுடைய 2 பெண்கள் மட்டுமே சபரிமலையில் தரிசனம் செய்ததாக தேவசம் போர்டு மந்திரி கடகம்பள்ளி சுரேந்திரன் தெரிவித்துள்ளார். #KadakampallySurendran #Sabarimala
திருவனந்தபுரம்:

சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடந்து வந்த நிலையில், கடந்த மாதம் 2-ந் தேதி தடை செய்யப்பட்ட வயதுடைய 2 பெண்கள் தரிசனம் செய்தனர்.

இதைப்போல சபரிமலையில் சமீபத்தில் நடந்து முடிந்த மகரவிளக்கு-மண்டல பூஜை காலத்தில் தடை செய்யப்பட்ட வயதுடைய 51 பெண்கள் தரிசனம் செய்ததாக சுப்ரீம் கோர்ட்டில் மாநில அரசு தெரிவித்தது. இது மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இது தொடர்பாக மாநில சட்டசபையில் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின.



இதற்கு தேவசம் போர்டு மந்திரி கடகம்பள்ளி சுரேந்திரன் எழுத்து மூலம் பதிலளித்தார். அதில் அவர், சபரிமலையில் சமீபத்தில் நடந்து முடிந்த சீசன் காலத்தில் தடை செய்யப்பட்ட வயதுடைய 2 பெண்கள் மட்டுமே தரிசனம் செய்ததாக கூறினார். சசிகலா (வயது 47) என்ற இலங்கைப்பெண் சபரிமலையில் தரிசனம் செய்ததாக வெளியான தகவல் குறித்து இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

மந்திரியின் இந்த தகவலால் சபரிமலையில் தரிசனம் செய்த தடை செய்யப்பட்ட வயதுடைய பெண்களின் எண்ணிக்கையில் குழப்பம் ஏற்பட்டு இருக்கிறது. #KadakampallySurendran #Sabarimala

Tags:    

Similar News