செய்திகள்

பூனை, நாய்கள் கொல்லப்படுவது பற்றி துப்பு கொடுப்பவர்களுக்கு ரூ.50 ஆயிரம் சன்மானம்

Published On 2019-02-03 09:30 IST   |   Update On 2019-02-03 09:30:00 IST
மகாராஷ்டிரா மாநிலத்தில் பூனை, நாய்கள் கொல்லப்படுவதை தடுக்க பிரபல பிராணிகள் நலச் சங்கம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. #Rewardforinfo #killingstraydogs #killingstraycats
புனே:

மகாராஷ்டிரா மாநிலம், புனே மாவட்டத்துக்கு உட்பட்ட எர்ரவாடா பகுதியில் கடந்த மாதத்தில் மட்டும் 14 பூனைகளும், 7 நாய்களும் மர்மமான முறையில் இறந்து கிடந்தன. மற்றவர்களுக்கு இடையூறாக திரிந்து கொண்டிருந்ததால் அவற்றை சிலர் விஷம் வைத்து கொன்றிருக்கலாம் என அப்பகுதி மக்கள் சந்தேகிக்கின்றனர்.



இந்நிலையில், பூனை, நாய்கள் கொல்லப்படுவது பற்றி துப்பு கொடுப்பவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் சன்மானம் அளிக்கப்படும் என பிரபல சர்வதேச பிராணிகள் நலச் சங்கமான ‘ஹியூமேன் சொசைட்டி’ அறிவித்துள்ளது.

தகவல் அளிப்பதற்கான தொடர்புக்கு 8899117773 என்ற கைபேசி எண்ணும் வெளியிடப்பட்டுள்ளது.  #Rewardforinfo #killingstraydogs #killingstraycats

Similar News