செய்திகள்

ஜனவரி மாத ஜி.எஸ்.டி. வருவாய் ரூ.1 லட்சம் கோடியை தாண்டியது

Published On 2019-02-02 21:36 GMT   |   Update On 2019-02-02 21:36 GMT
ஜனவரி மாத ஜி.எஸ்.டி. வருவாய் ரூ.1 லட்சத்து 2 ஆயிரத்துக்கு 503 கோடி வரி வசூலானதாக மத்திய அரசின் அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. #GST #January #RevenueCollection
புதுடெல்லி:

நாடு முழுவதும் ஒரே சீரான வரியை வசூலிக்கும் நோக்கில் சரக்கு மற்றும் சேவை வரியை (ஜி.எஸ்.டி.) மத்திய அரசு அறிமுகம் செய்தது. இந்த முறையில் வசூலாகும் வரி வருவாய் குறித்து மாதந்தோறும் அறிக்கை வெளியிடப்பட்டு வருகிறது.

அந்த வகையில் கடந்த மாதம் ரூ.1 லட்சத்து 2 ஆயிரத்துக்கு 503 கோடி வரி வசூலானதாக மத்திய அரசின் அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. இது கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் வசூலான தொகையை (ரூ.89,825 கோடி) விட 14 சதவீதம் அதிகமாகும். நுகர்வோரின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு பொருட்களின் வரியை குறைத்த போதும், ஜி.எஸ்.டி. வருவாய் ரூ.1 லட்சம் கோடியை கடந்திருப்பதாக மத்திய அரசு கூறியுள்ளது. 2018-19-ம் நிதியாண்டில் ஜி.எஸ்.டி. வருவாய் ரூ.1 லட்சம் கோடியை தாண்டியிருப்பது இது 3-வது முறை என்பது குறிப்பிடத்தக்கது. #GST #January #RevenueCollection 
Tags:    

Similar News