செய்திகள்

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் சமஸ்கிருத இறைவணக்கத்துக்கு எதிரான வழக்கு

Published On 2019-01-29 23:35 GMT   |   Update On 2019-01-29 23:35 GMT
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் சமஸ்கிருத இறைவணக்கத்துக்கு எதிரான வழக்கின் மீதான விசாரணையை அரசியல்சாசன அமர்வுக்கு மாற்றி நீதிபதி உத்தரவிட்டார். #KVSchool #SanskritHymns #SupremeCourt
புதுடெல்லி:

சுப்ரீம் கோர்ட்டில் வக்கீல் விநாயக் ஷா என்பவர், கேந்திரியா வித்யாலயா பள்ளிகளில் காலையில் கட்டாயம் சமஸ்கிருதத்தில் இறைவணக்கம் செய்ய வேண்டும் என்ற உத்தரவுக்கு எதிராக மனு தாக்கல் செய்தார். இது மாணவர்களின் நம்பிக்கை மற்றும் உணர்வுகளை அவமதிப்பதுடன், அவர்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதாகும் என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை நீதிபதிகள் பாலிநாரிமன், வினீத் சரண் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. நீதிபதி பாலிநாரிமன், இந்த பிரச்சினை மிகவும் முக்கியமானது. எனவே இதுகுறித்து தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல்சாசன அமர்வு விசாரணை நடத்தும் என்று வழக்கை அரசியல்சாசன அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டார்.
Tags:    

Similar News